Saturday, September 8, 2018

ஜக்கு & மக்கு.... ஸ்மைல் ப்ளீஸ்

*ஜக்கு:* என்னடா 5 மணிக்கு வரேன்னுட்டு ஆறரை மணிக்கு வர்ற?

*மக்கு:* ரோடுல ஒத்தன் 500ருபா நோட்டைத் தொலைச்சுட்டு தேடிக்கிட்டு இருந்தான்!

*ஜக்கு:* பரவாயில்லையே! தேடி எடுத்துக் கொடுத்தியா?

*மக்கு:* இல்லை அவர் போற வரைக்கும் நோட்டு மேலேயே நின்னுகிட்டு இருக்கவேண்டியதாப்போச்சு.
---------------------------------------------------
*மக்கு:* இன்னிக்கு ஸ்கூல்ல வாத்தியார் என்னை பிரம்பால அடி அடீன்னு அடிச்சுட்டாரு!

*ஜக்கு:* ஏன் என்ன தப்பு செஞ்ச?

*மக்கு:* 33 எழுதச் சொன்னார்! தெரியலைன்னு முழுச்சேன், சரி 3 போட்டு பக்கத்துல 3 போடச்சொன்னாரு

*ஜக்கு:* இது கூடதெரியலையா?

*மக்கு :* ஒரு 3 போட்டுட்டேன், இன்னொரு 3-ஐ எந்தப் பக்கம் போடணும்னு கேட்டேன்!
---------------------------------------------------
*மக்கு:* என் பையன் தங்கமானவன்டா!

*ஜக்கு:* எப்படி சொல்ற?

*மக்கு:* சிகரெட், தண்ணி, பொம்பள... எந்த கெட்டப்பழக்கமும் கிடையாது.

*ஜக்கு:* உன் பையனுக்கு என்ன வயசு?

*மக்கு :* ஒரு வயசு.
---------------------------------------------------
*மனைவி :* - உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கான்னு கல்யாணத்துக்கு முன்பே ஏன் என்கிட்டே சொல்லலை..

*கணவன் :* - சொன்னேனே... மறந்துட்டியா...

*மனைவி :* - எப்போ சொன்னீங்க...நீங்க சொல்லவே இல்லை...

*கணவன் :* - உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு நான் சொல்லலை..

*மனைவி :* -????????
---------------------------------------------------
*மனைவி :* நம்ம பையன் என்னவாக வரணும்னு ஆசைப்படுறீங்க?

*கணவன் :* அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்…ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது… நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்…!!
---------------------------------------------------
*ஹோட்டல் ஓனர்:* "சார், தினமும் பார்சல் வாங்கிட்டு போறீங்களே..அதுக்கு இங்கயே சாப்பிட வேண்டியது தானே?"

*சர்தார்:* "மன்னிக்கணும்.. என்னை டாக்டர் ஹோட்டல்ல சாப்பிடக் கூடாதுன்னு சொல்லி இருக்காரு. அதான்.. !!!"
---------------------------------------------------
*TTR:* "எண்டா ராஸ்கல்! திருட்டு ரயிலேரியா சென்னை வரைக்கும் வந்தே?"
*ஒருவன்*: "சார்! அது திருட்டு ரயில்ன்னு சத்தியமா எனக்கு தெரியாது.. நான் அது கவர்மெண்ட் ரயில்ன்னு நெனச்சுத்தான் ஏறினேன்.."
---------------------------------------------------
*வாத்தியார்:* "ஏன்டா கணக்கு தப்பா போட்டுட்டு டான்ஸ் ஆடுற?"
*மாணவன்:* "நீங்க தானே சொன்னீங்க, கணக்கு தப்பா இருந்தாலும் ஸ்டெப்ஸ்க்கு மார்க் போடுவேன்னு.. அதான் சார்.."
*வாத்தியார்:* ….!!!!!

Saturday, February 17, 2018

சிரி... சிரி... சிரி

வாய் விட்டு சிரிங்க !
😆😅😆😅😆😅😆😅

😆   மனைவி : என்னங்க, கணவன் – மனைவி சொர்க்கத்துல சேர்ந்து வாழ முடியாதாமே..!

கணவன் : அதனால்தானடி அதை சொர்க்கம்னு சொல்றாங்க..!

😀😀😀😀😀😀😀😀

மனைவி : ஏங்க! நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா? அவருக்குப் பார்த்த பெண் நல்லாவே இல்ல!

கணவன் : நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா?

😀😀😀😀😀😀😀😀😀😀😁

மனைவி : ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானேசமைக்கிறேன்…எனக்கு மாச எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?

கணவன் : உனக்கு எதுக்குடா சம்பளம்… நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்சுரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே..

😀😀😀😀😀😀😀😀😀😀😀

மனைவி :- உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கான்னு கல்யாணத்துக்கு முன்பே ஏன் என்கிட்டே சொல்லலை..

கணவன் :- சொன்னேனே... மறந்துட்டியா...

மனைவி :- எப்போ சொன்னீங்க...நீங்க சொல்லவே இல்லை...

கணவன் :- உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு நான் சொல்லலை..
மனைவி :-????????

😀😀😀😀😀😀😀😀😀😀😀

மனைவி : ராத்திரி தூக்கத்தில ஏன் சிரிச்சிங்க.?

கணவன் : கனவுல அனுஷ்கா வந்தா..!

மனைவி : அப்பறம் ஏன் கத்துனீங்க.?

கணவன் : நடுவுல நீ வந்துட்ட..

😀😀😀😀😀😀😀😀😀😀😀

மனைவி : என்னங்க.. அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே.. அவரு ஒரு தடவை என்னை பொண்ணு பார்க்க வந்திருந்தாரு. நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொன்னதினால அதை நினைச்சே இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாராம்.

கணவன் : அடப்பாவி…! அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமாவா கொண்டாடிக்கிட்டிருக்கான்..?

😀😀😀😀😀😀😀😀😀😀😀

ம்னைவி : "என்னங்க, தீபாவளி அதுவுமா நான் செய்து வச்சிருந்த பலகாரத்தை எல்லாம் திருடன் எவனோ புகுந்து சாப்பிட்டுக்கிட்டிருக்கான்?"

கணவன் : "பேசாம தூங்கு, காலையில அவன் செத்து கிடப்பான், விடிந்ததும் பார்த்துக்கலாம்.."

Friday, February 16, 2018

ரிலாக்ஸ் ப்ளீஸ்

பேராசிரியர்: சாப்ட் வேர்னா என்னா, ஹார்டு வேர்னா என்னா?
*
இவன்: செடியில உள்ளது சாப்ட் வேரு.. மரத்துல உள்ளது ஹார்டு வேரு.
😂😂😂😂

அவர்: ஆண்கள்ல 65% பேர் மனைவி சொல்றத கேப்பாங்க.
*
இவர்: அப்ப மீதி பேர்?
*
அவர்: இன்னும் கல்யாணம் ஆகல!
😁😁😁😁

அவர்: டாக்டருக்கு நீட் தேர்வு வேணுமோ? வேண்டாமோ ?ஆனா, ஒரு தேர்வு அவசியம்.
*
இவர்: என்ன அது?
*
அவர்: நீட்டா ...எழுதத் தேர்வு. என்னா எழுதுறார்னு ஒன்னுமே புரியமாட்டேங்குது.!
😂😂😂😂

அவர்: அபராதத்திற்கும், வரிக்கும் வித்தியாசம் தெரியுமா?
*
இவர்: தெரியாது ,சொல்லுங்க.!
*
அவர்: தவறான செயலுக்கு தண்டம் கட்டுனா அபராதம்..
சரியான செயலுக்கு தண்டம் கட்டுனாஅது வரி.!
😂😂😂

அவன்: இதோ போறானே!அவனுக்கு பொது அறிவு சுத்தமா இல்ல.
*
இவன்: எப்படிச் சொல்றீங்க?

அவன்: பழமொழிக்கு இங்லீஸ்ல என்னன்னு கேட்டான். புரூட் லாங்வேஜ்னு சொன்னா ,ஒத்துக்க மாட்றான்.
😂😂😂😂

டாக்டர்: இந்த மருந்த காலைல வெறும் வயத்துல சாப்டுங்க..
*
வந்தவர்: ஒரு பனியன்கூட... போட்ருக்ககூடாதா டாக்டர்.?
😂😂😂😂

கனவன்: என்ன சாம்பார்ல 2 காயின் கிடக்கு.?
*
மனைவி: நீங்கதானே சமையல்ல சேஞ்ச் வேனும்னு சொன்னீங்க.?!
😁😁😁😁

அவர்: அச்சனை உங்க பேருக்கா.?
*
இவர்: சாமி பேருக்கே பண்னுங்க.. எனக்கு தினம் வீட்டுலயே அர்ச்சனை நடக்குது.
😁😁😁😁😁

அவர்: உங்க மனைவிய செல்லமா எப்டி கூப்புடுவிங்க.?
*
இவர்: கூகுள்னு.. எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சுடுவா..
😂😂😂😂😁

தீபாவளி சைடு எபக்ட்...
*
மனைவி: எனக்கு இதே டிசைன்ல வேற கலர்ல காட்டுங்க !!
*
கணவன்: அடியேய் ! துணி எல்லாம் எடுத்து முடிச்சு ,நாம இப்ப காய்கறி கடைல இருக்கறோம்!!
😂😂😂😂

தாத்தா : அந்த காலத்துல ,உன் வயசுல ,நான் கடைக்கு இரண்டு ரூபாய் எடுத்துட்டு போனா ,வீட்டுக்கு வரும்போது பால், பழம், ரொட்டி, மிட்டாய், சோப்பு, பவுடர் எல்லாம் கொண்டு வருவேன்.. தெரியுமா ?
*
பேரன் : இப்ப அப்படியெல்லாம் முடியாது தாத்தா.. !எல்லாக் கடையிலேயும் ,நிறைய C C TV காமரா வச்சுருக்காங்க...!
😁😁😁😁😁

Monday, December 25, 2017

பழமொழி & புதுமொழி

*பழசு:* ஆழம் தெரியாமல் காலை விடாதே..!!
 *புதுசு:* கேமரா இல்லாமல் போனை வாங்காதே..😃

*பழசு:* யானைக்கொரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும்
*புதுசு:* ஆப்பிளுக்கு ஒரு காலம் வந்தா, ஆண்ட்ராய்டுக்கு ஒரு காலம் வரும்..😃

*பழசு:* வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்..!!
 *புதுசு:* வல்லவனுக்கு செல்லும் ஆயுதம்..😃

 *பழசு:* குரைக்கிற நாய் கடிக்காது!! 
*புதுசு:* கொரியன் போன் உழைக்காது..😃

 *பழசு:* கடுகு சிறுத்தாலும், காரம் குறையாது..!!
 *புதுசு:* பேசாம இருந்தா, பேலன்ஸ் குறையாது..😃

*பழசு:* வெட்டு ஒண்ணு... துண்டு ரெண்டு..!!
 *புதுசு:* செல்போன் ஒண்ணு... சிம்மு ரெண்டு..😃

 *பழசு:* குடிகாரன் பேச்சு, விடிஞ்சா போச்சு..!
 *புதுசு:* கஸ்டமர்கேர் பேச்சு, கட் பண்ணினா போச்சு..😃

 *பழசு:* நாய் வாலை நிமிர்த்த முடியாது..!!
 *புதுசு:* நெட்வொர்க்காரனை திருத்த முடியாது..😃

 *பழசு:* தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு
 *புதுசு:* தாயும் பிள்ளையும் என்றாலும் போனும் ப்ளூடூத்தும் வேறு..😃

 *பழசு:* குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்..!!
 *புதுசு:* கொரியன் செட்டு கதறடிக்கும்..😃

 *பழசு:* காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்!!
 *புதுசு:* பேலன்ஸ் இருக்கும்போதே பேசிக்கொள்..😃 


*பழசு:* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்..!!
*புதுசு:* செல்போனின் அழகு சார்ஜ் நிற்பதில் தெரியும்..😃

 *பழசு:* இளங்கன்று பயமறியாது..!! *புதுசு:* புது பேட்டரி சார்ஜ் இறங்காது..😃

Friday, December 8, 2017

அன்றும் இன்றும்

1990களில் மக்களின் வாழ்க்கை முறையும் 2010-களில் வாழ்க்கை முறையும்

 

Friday, November 17, 2017

விஜய் பேன்ஸின் GST வரி குறைப்பு பற்றிய மீம்ஸ்



BJP கட்சியின் தமிழ்நாட்டு பிரதிநிதிகளான தமிழிசை, எச்.ராஜா போன்றவர்கள் GST குறித்த வசனத்திற்காக விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்திற்கு கொடுத்த எதிர்ப்புகள் ஏராளம். இவர்களின் குடைச்சல் தாங்கமுடியாமல் மெர்சல் படக்குழு GST சம்பந்த பட்ட காட்சிகளை நீக்கியது நாம் அனைவரும் அறிந்ததே.

இதற்காக நாடே கொந்தளித்தது. இது நடந்து ஓரிரு வாரங்களில் மோடி அரசு 220 பொருட்களின் மீதான GST வரியை குறைத்துள்ளது. இதற்க்கு மெர்சல் படமும் ஒரு முக்கிய காரணம் என்று நினைத்து விஜய் ரசிகர்கள் BJP -யை கலாய்த்து மீம்ஸ் போட்டிருக்கிறார்கள். அது இதோ.


Tamil Nadu BJP party leaders Tamilisai and H.Raja protest against GST related  dialog in one of the tamil super star actor Vijay's mersal movie. Due to the protest and mutual agreement the producers of the film agreed to remove the specific scenes related to GST. Whole nation condemned this irrational behavior by BJP party. After few weeks of this incident Modi led BJP government slashed GST tax on over 220 items. The mersal movie played big part to bring down the GST rates. Vijay fans are celebrating by counter memes message.

Wednesday, October 18, 2017

விமர்சகர்களுக்கு விஜயின் பதில்

மற்ற நடிகர்களின் ரசிகர்கள் (குறிப்பாக அஜித் ரசிச்கர்கள்) விஜயின் மெர்சல் படம் குறித்து மீம்ஸ் போட்டு வந்தார்கள். அதற்கு பதிலடி குடுக்கும் மீம்ஸ் இதோ

மெர்சல் ரிலீஸ் ஆகும் முன் (Before Mersal Release)



மெர்சல் ரிலீஸ் ஆகும் போது (During Mersal Release)


மெர்சல் ரிலீஸ் ஆன பின் ()

Coming Soon....