Saturday, February 17, 2018

சிரி... சிரி... சிரி

வாய் விட்டு சிரிங்க !
😆😅😆😅😆😅😆😅

😆   மனைவி : என்னங்க, கணவன் – மனைவி சொர்க்கத்துல சேர்ந்து வாழ முடியாதாமே..!

கணவன் : அதனால்தானடி அதை சொர்க்கம்னு சொல்றாங்க..!

😀😀😀😀😀😀😀😀

மனைவி : ஏங்க! நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா? அவருக்குப் பார்த்த பெண் நல்லாவே இல்ல!

கணவன் : நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா?

😀😀😀😀😀😀😀😀😀😀😁

மனைவி : ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானேசமைக்கிறேன்…எனக்கு மாச எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?

கணவன் : உனக்கு எதுக்குடா சம்பளம்… நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்சுரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே..

😀😀😀😀😀😀😀😀😀😀😀

மனைவி :- உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கான்னு கல்யாணத்துக்கு முன்பே ஏன் என்கிட்டே சொல்லலை..

கணவன் :- சொன்னேனே... மறந்துட்டியா...

மனைவி :- எப்போ சொன்னீங்க...நீங்க சொல்லவே இல்லை...

கணவன் :- உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு நான் சொல்லலை..
மனைவி :-????????

😀😀😀😀😀😀😀😀😀😀😀

மனைவி : ராத்திரி தூக்கத்தில ஏன் சிரிச்சிங்க.?

கணவன் : கனவுல அனுஷ்கா வந்தா..!

மனைவி : அப்பறம் ஏன் கத்துனீங்க.?

கணவன் : நடுவுல நீ வந்துட்ட..

😀😀😀😀😀😀😀😀😀😀😀

மனைவி : என்னங்க.. அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே.. அவரு ஒரு தடவை என்னை பொண்ணு பார்க்க வந்திருந்தாரு. நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொன்னதினால அதை நினைச்சே இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாராம்.

கணவன் : அடப்பாவி…! அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமாவா கொண்டாடிக்கிட்டிருக்கான்..?

😀😀😀😀😀😀😀😀😀😀😀

ம்னைவி : "என்னங்க, தீபாவளி அதுவுமா நான் செய்து வச்சிருந்த பலகாரத்தை எல்லாம் திருடன் எவனோ புகுந்து சாப்பிட்டுக்கிட்டிருக்கான்?"

கணவன் : "பேசாம தூங்கு, காலையில அவன் செத்து கிடப்பான், விடிந்ததும் பார்த்துக்கலாம்.."

Friday, February 16, 2018

ரிலாக்ஸ் ப்ளீஸ்

பேராசிரியர்: சாப்ட் வேர்னா என்னா, ஹார்டு வேர்னா என்னா?
*
இவன்: செடியில உள்ளது சாப்ட் வேரு.. மரத்துல உள்ளது ஹார்டு வேரு.
😂😂😂😂

அவர்: ஆண்கள்ல 65% பேர் மனைவி சொல்றத கேப்பாங்க.
*
இவர்: அப்ப மீதி பேர்?
*
அவர்: இன்னும் கல்யாணம் ஆகல!
😁😁😁😁

அவர்: டாக்டருக்கு நீட் தேர்வு வேணுமோ? வேண்டாமோ ?ஆனா, ஒரு தேர்வு அவசியம்.
*
இவர்: என்ன அது?
*
அவர்: நீட்டா ...எழுதத் தேர்வு. என்னா எழுதுறார்னு ஒன்னுமே புரியமாட்டேங்குது.!
😂😂😂😂

அவர்: அபராதத்திற்கும், வரிக்கும் வித்தியாசம் தெரியுமா?
*
இவர்: தெரியாது ,சொல்லுங்க.!
*
அவர்: தவறான செயலுக்கு தண்டம் கட்டுனா அபராதம்..
சரியான செயலுக்கு தண்டம் கட்டுனாஅது வரி.!
😂😂😂

அவன்: இதோ போறானே!அவனுக்கு பொது அறிவு சுத்தமா இல்ல.
*
இவன்: எப்படிச் சொல்றீங்க?

அவன்: பழமொழிக்கு இங்லீஸ்ல என்னன்னு கேட்டான். புரூட் லாங்வேஜ்னு சொன்னா ,ஒத்துக்க மாட்றான்.
😂😂😂😂

டாக்டர்: இந்த மருந்த காலைல வெறும் வயத்துல சாப்டுங்க..
*
வந்தவர்: ஒரு பனியன்கூட... போட்ருக்ககூடாதா டாக்டர்.?
😂😂😂😂

கனவன்: என்ன சாம்பார்ல 2 காயின் கிடக்கு.?
*
மனைவி: நீங்கதானே சமையல்ல சேஞ்ச் வேனும்னு சொன்னீங்க.?!
😁😁😁😁

அவர்: அச்சனை உங்க பேருக்கா.?
*
இவர்: சாமி பேருக்கே பண்னுங்க.. எனக்கு தினம் வீட்டுலயே அர்ச்சனை நடக்குது.
😁😁😁😁😁

அவர்: உங்க மனைவிய செல்லமா எப்டி கூப்புடுவிங்க.?
*
இவர்: கூகுள்னு.. எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சுடுவா..
😂😂😂😂😁

தீபாவளி சைடு எபக்ட்...
*
மனைவி: எனக்கு இதே டிசைன்ல வேற கலர்ல காட்டுங்க !!
*
கணவன்: அடியேய் ! துணி எல்லாம் எடுத்து முடிச்சு ,நாம இப்ப காய்கறி கடைல இருக்கறோம்!!
😂😂😂😂

தாத்தா : அந்த காலத்துல ,உன் வயசுல ,நான் கடைக்கு இரண்டு ரூபாய் எடுத்துட்டு போனா ,வீட்டுக்கு வரும்போது பால், பழம், ரொட்டி, மிட்டாய், சோப்பு, பவுடர் எல்லாம் கொண்டு வருவேன்.. தெரியுமா ?
*
பேரன் : இப்ப அப்படியெல்லாம் முடியாது தாத்தா.. !எல்லாக் கடையிலேயும் ,நிறைய C C TV காமரா வச்சுருக்காங்க...!
😁😁😁😁😁