*பழசு:* ஆழம் தெரியாமல் காலை விடாதே..!!
*புதுசு:* கேமரா இல்லாமல் போனை வாங்காதே..😃
*பழசு:* யானைக்கொரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும்
*புதுசு:* ஆப்பிளுக்கு ஒரு காலம் வந்தா, ஆண்ட்ராய்டுக்கு ஒரு காலம் வரும்..😃
*பழசு:* வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்..!!
*புதுசு:* வல்லவனுக்கு செல்லும் ஆயுதம்..😃
*பழசு:* குரைக்கிற நாய் கடிக்காது!!
*புதுசு:* கொரியன் போன் உழைக்காது..😃
*பழசு:* கடுகு சிறுத்தாலும், காரம் குறையாது..!!
*புதுசு:* பேசாம இருந்தா, பேலன்ஸ் குறையாது..😃
*பழசு:* வெட்டு ஒண்ணு... துண்டு ரெண்டு..!!
*புதுசு:* செல்போன் ஒண்ணு... சிம்மு ரெண்டு..😃
*பழசு:* குடிகாரன் பேச்சு, விடிஞ்சா போச்சு..!
*புதுசு:* கஸ்டமர்கேர் பேச்சு, கட் பண்ணினா போச்சு..😃
*பழசு:* நாய் வாலை நிமிர்த்த முடியாது..!!
*புதுசு:* நெட்வொர்க்காரனை திருத்த முடியாது..😃
*பழசு:* தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு
*புதுசு:* தாயும் பிள்ளையும் என்றாலும் போனும் ப்ளூடூத்தும் வேறு..😃
*பழசு:* குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்..!!
*புதுசு:* கொரியன் செட்டு கதறடிக்கும்..😃
*பழசு:* காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்!!
*புதுசு:* பேலன்ஸ் இருக்கும்போதே பேசிக்கொள்..😃
*பழசு:* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்..!!
*புதுசு:* செல்போனின் அழகு சார்ஜ் நிற்பதில் தெரியும்..😃
*பழசு:* இளங்கன்று பயமறியாது..!!
*புதுசு:* புது பேட்டரி சார்ஜ் இறங்காது..😃






